காவேரிப்பட்டணத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தற்கொலை

தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் லாரி அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காவேரிப்பட்டணத்தில் கடன் தொல்லையால் லாரி அதிபர் தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் குண்டல்பட்டி ரோட்டில் வசித்து வருபவர் சம்பத். இவரது மகன் சபரிகிரி(29). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் தொழில் செய்து வந்தார். இதில் நஷ்டம் ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அந்த கடனை திருப்பி கொடுக்க முடியவில்லை. 

இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். 

இது குறித்து காவேரிப்பட்டணம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

X

Maalai Malar
www.maalaimalar.com