பர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை

பர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தூக்கு மாட்டி தற்கொலை செய்துகொண்டார்.
பர்கூர் அருகே கடன் தொல்லையால் கிரானைட் நிறுவன ஊழியர் தற்கொலை
Published on

கிருஷ்ணகிரி:

பர்கூர் அருகே உள்ள ஐகுந்தம்கொத்தபள்ளி பகுதியைச் சேர்ந்தவர் புட்டன் என்பவர் மகன் சித்ரசேகரன்(34). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு அதிக அளவில் கடன் இருந்துள்ளது. அந்த கடனை திருப்பி கொடுக்க முடியாமல் பரிதவித்து வந்துள்ளார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட அவர் நேற்று காலையில் வீட்டின் அறையில் தூக்கு மாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து வந்த பர்கூர் போலீசார் சித்ரசேகரன் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com