கிருமாம்பாக்கம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை

கிருமாம்பாக்கம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருமாம்பாக்கம் அருகே கடன் தொல்லையால் மீனவர் தற்கொலை
Published on

பாகூர்:

கிருமாம்பாக்கம் அருகே பனித்திட்டு மேற்கு வீதியை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது55), மீனவர். இவரது மனைவி வசந்தா. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சுப்பிரமணியன் பலரிடம் கடன் வாங்கி மகளுக்கு திருமணம் செய்து வைத்தார்.

மனைவி உடல்நிலை பாதிக்கப்பட்டதாலும், மகளுக்கு திருமணம் நடத்தி வைத்ததில் கடன் ஏற்பட்டதால் சுப்பிரமணியன் சோகமாக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற சுப்பிரமணியன் அதன்பிறகு வீடு திரும்பவில்லை.

இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள கடற்கரையில் மீன்பிடி வலைகள் வைக்கும் கொட்டகையில் சுப்பிரமணியன் நைலான் கயிற்றால் தூக்குபோட்டு பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் கிருமாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com