கடன் தொல்லையால் கணவன்-மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலை முயற்சி

கோவையில் கடன் தொல்லையால் கணவன்- மனைவி வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை முயற்சி
தற்கொலை முயற்சி
Published on

கோவை:

கோவை வீரகேரளம் மனோஜ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (50). சமையல் தொழிலாளி. இவரது மனைவி பார்வதி (40). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். அவர் கோவையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறார்.

இன்று காலை ராமச்சந்திரனும், அவரது மனைவி பார்வதியும் பூச்சி மருந்து குடித்து விட்டனர். இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து ராமச்சந்திரன் மகனுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக வீட்டிற்கு விரைந்து வந்தார். தாய்-தந்தையை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தார். அங்கு அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டு உள்ளனர்.

கடன் தொல்லையால் ராமச்சந்திரனும், அவரது மனைவியும் வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து வடவள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com