முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் அரசு ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை

முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் அரசு ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
முதலியார்பேட்டையில் கடன் தொல்லையால் அரசு ஊழியர் தூக்குபோட்டு தற்கொலை
Published on

புதுச்சேரி:

முதலியார்பேட்டை அப்துல்கலாம் நகர் அரசு ஊழியர் குடியிருப்பில் வசித்து வந்தவர் செல்வம் (வயது40). இவர் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அட்டென்டராக பணிபுரிந்து வந்தார். இருவருக்கு ஜெயராணி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.

குடிப்பழக்கம் உள்ள செல்வம் சரியாக வேலைக்கு செல்லாததால் அவருக்கு சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் செல்வம் பலரிடம் பணம் கடன் வாங்கி மதுகுடித்து வந்தார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு செல்வத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தனர். மேலும் செல்வத்துக்கும் அவரது மனைவி ஜெயராணிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

இதனால் மனமுடைந்த செல்வம் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் செல்வம் மின்விசிறியில் தூக்குபோட்டு தொங்கினார்.

பின்னர் சிறிது நேரம் கழித்து வெளியே சென்றிருந்த ஜெயராணி வீட்டுக்கு வந்தார். அப்போது கணவர் தூக்கில் தொங்குவதை கண்டு அலறினார். பின்னர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கணவரை தூக்கில் இருந்து மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே செல்வம் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வீரபத்திரசாமி, உதவி சப்-இன்ஸ்பெக்டர் தணிகாசலம் ஆகியோர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com