தற்கொலை
தற்கொலை

கடன் தொல்லையால் பொம்மை வியாபாரி தற்கொலை

தருமபுரியில் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்த பொம்மை வியாபாரி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
Published on

பாலக்கோடு:

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு ஹவுசிங் போடு பகுதியை சேர்ந்தவர் பிரபு (வயது35). பொம்மை வியாபாரியான இவரது மனைவி வசந்தா. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடம் ஆன நிலையில் ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.

இந்தநிலையில் பிரபு அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக தெரிகிறது. வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டதால் அந்த கடனை அவர் திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட பிரபு நேற்று வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். தூக்கில் பிணமாக  கிடந்த பிரபுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசார ணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com