ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ படத்தை எரிக்க முயற்சி

ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உருவபடத்தை எரிக்க முயன்ற 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜெயலலிதா குறித்து அவதூறு பேச்சு: இளங்கோவன் உருவ படத்தை எரிக்க முயற்சி
Published on

திண்டுக்கல்:

சட்டப்பேரவையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத்தை திறக்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி முயற்சி எடுத்து வருகிறார். இதனை கண்டித்து முன்னாள் காங்கிரஸ் மாநில தலைவர் இளங்கோவன் பேட்டியளித்தார். அதில் நீதிமன்றத்தால் குற்றம்சாட்டப்பட்ட ஒருவரது படத்தை சட்டமன்றத்தில் திறக்கக்கூடாது என்று கூறியதோடு மேலும் சில சர்ச்சைக்குரிய கருத்துகளையும் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இளங்கோவனின் உருவ பொம்மையை எரித்து போராட்டம் நடத்தப் போவதாக எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையினர் அறிவித்தனர்.

இளைஞர், இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தகுமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்டோர் இன்று பஸ்நிலையம் அருகில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை முன்பு இளங்கோவனின் உருவ பொம்மையை கொண்டு வந்தனர். ஆனால் அதனை போலீசார் பறித்துக் கொண்டனர்.

பின்னர் இளங்கோவனின் உருவ படத்தை வைத்து எரிக்க முயன்றனர். அப்போது அவரை கண்டித்து கோ‌ஷங்களும் எழுப்பினர். அவரது படங்களை எரிக்க முயன்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

ஆனந்தகுமார், பாலமுருகன், காளிதாஸ், வனராஜ், மருதுமலர், நாகராஜ், குழந்தைராஜ், உளுந்து மலர் உள்பட 15 பேர்கள் கைது செய்யப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com