குரும்பாபேட்டில் பொதுப்பணித்துறை பெண் ஊழியர் மயங்கி விழுந்து பலி

குரும்பாபேட்டில் பொதுப்பணித்துறை பெண் ஊழியர் மயங்கி விழுந்து இறந்து போனார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோப்பு படம்.
கோப்பு படம்.
Published on

புதுச்சேரி:

புதுவை குரும்பாபேட் ஒத்தவாடை தெருவை சேர்ந்தவர் ரகுராமன். இவரது மனைவி அனுசுயா (வயது41). இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரகுராமன் இறந்து விட்டார். அனுசுயா முத்திரையர்பாளையத்தில் உள்ள பொதுப்பணித்துறைகுட்பட்ட நீர்த்தேக்க தொட்டியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் அனுசுயா சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் கால் வலிக்காக மாத்திரை சாப்பிட்டார். மாத்திரை சாப்பிட்ட சில மணி நேரத்தில் அனுசுயா நெஞ்சு வலிப்பதாக மயங்கி சாய்ந்தார். உடனடியாக அனுசுயாவை அவரது சகோதரர் ஆனந்தபாபு மீட்டு கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே அனுசுயா இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com