டிட்லி புயல், வெள்ளம், நிலச்சரிவுக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு

ஒடிசா மாநிலத்தை தாக்கிய டிட்லி புயலின் எதிரொலியாக பெய்த மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. #Odishafloods #CycloneTitli
டிட்லி புயல், வெள்ளம், நிலச்சரிவுக்கு ஒடிசாவில் பலியானோர் எண்ணிக்கை 61 ஆக உயர்வு
Published on

புவனேஸ்வர்:

வங்கக் கடலில் உருவான டிட்லி புயல், ஒடிசாவின் கோபால்பூருக்கும் ஆந்திராவின் கலிங்கப்பட்டினத்துக்கும் இடையே கடந்த 11-ம் தேதி கரையைக் கடந்தது. இதையடுத்து பலத்த காற்றுடன் ஒடிசா கடற்கரைகளில் பலத்த மழை பெய்து வருகிறது. 

சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவும் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் மற்றும் மாநில மீட்புக் குழுவினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

இங்குள்ள 17 மாவட்டங்களை பெருமளவு பாதித்த வெள்ளத்தால் 50 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் நாசமடைந்துள்ளன. பல லட்சம் ஹெக்டர்களில் பயிர்கள் அழிந்துப்போயின. பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கு தலா 50 கிலோ அரிசி, மண்ணெண்ணெய் மற்றும் ரொக்கப்பணம் ஆகியவை வழங்கப்படுகிறது.

இந்நிலையில், நிலச்சரிவு மற்றும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை இன்று 61 ஆக உயர்ந்துள்ளது.  #Odishafloods  #CycloneTitli  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com