மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 51 ஆக உயர்வு

இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 51 ஆக அதிகரித்துள்ளது.
மூணாறு நிலச்சரிவு
மூணாறு நிலச்சரிவு
Published on

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். நேற்றைய 4-வது நாள் மீட்புப் பணியின்போது மொத்தம் 49 சடலங்கள் மீட்கப்பட்டது.

இன்று ஐந்தாவது நாள் மீட்புப்பணியின்போது மேலும் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டது. இதனால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com