நைஜீரியா - சவ ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்கரவாதிகள் தாக்குதலில் 65 பேர் பலி

நைஜீரியா நாட்டின் வடகிழக்கு பகுதியில் சவ ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்கரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிலர்
தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் சிலர்
Published on

கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் சம அளவில் வாழ்ந்து வரும் நைஜீரியா நாட்டில் இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று போக்கோஹரம் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கிராமங்களுக்குள் கும்பலாக நுழையும் இவர்கள், அங்குள்ள மக்களை ஈவிரக்கமின்றி சுட்டுக் கொன்று குவிக்கின்றனர்.
இந்நிலையில், நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் போர்னோ மாவட்ட தலைநகரான மைடுகுரி நகரை ஒட்டியுள்ள கிராமத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சவ ஊர்வலத்தின் மீது போக்கோ ஹரம் பயங்ரவாதிகள் நடத்திய ஆவேச தாக்குதலில் 65 பேர் கொல்லப்பட்டனர்.

முதல்கட்ட தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டதாகவும், பயங்கரவாதிகளுடன் நடந்த சண்டையில் மேலும் 42 பேர் உயிரிழந்ததாகவும் அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

X

Maalai Malar
www.maalaimalar.com