மூணாறு நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு

இடுக்கி மாவட்டம் மூணாறு ராஜமலை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது.
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி
Published on

திருவனந்தபுரம்:

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமாலை பகுதியில் கண்ணன் தேயிலை தோட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 7) மழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் உள்ள தொழிலாளர் குடியிருப்பில் தங்கியிருந்த 82-க்கும் அதிகமான தொழிலாளர்கள் நிலச்சரிவில் சிக்கினர்.

இதையடுத்து நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினருடன், மாநில காவல்துறையினரும், தீயணைப்பு வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். 5 நாட்களுக்கு மேலாக நீடித்து வரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.  

இந்நிலையில், இன்றும் நடைபெற்றுவரும் மீட்பு பணியில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த மேலும் சிலரது உடல்கள் மீட்கப்பட்டன. இதனால், மூணாறு நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55 ஆக அதிகரித்துள்ளது. இந்த விபத்தில் இன்னும் 16 பேர் மாயமாகியுள்ளதால் அவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மூணாறு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com