ரஷியாவின் சைபிரியா பகுதியில் வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் பலி

ரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையின் எதிரொலியாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்குக்கு 18 பேர் உயிரிழந்தனர்.
வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்
வெள்ளத்தில் மூழ்கிய கிராமம்
Published on

ரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்கு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.

குறிப்பாக, இர்குட்ஸ்க் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு, காணாமல் போன சுமார் 20 பேரை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com