தான்சானியா டேங்கர் லாரி விபத்து- பலி எண்ணிக்கை 95 ஆக உயர்வு

தான்சானியா நாட்டில் டேங்கர் லாரி கவிழ்ந்து தீப்பிடித்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது.
தீப்பற்றி எரியும் டேங்கர் லாரி
தீப்பற்றி எரியும் டேங்கர் லாரி
Published on

மாஸ்கோ:

தான்சானியா நாட்டில் டொடோமா நகருக்கு 160 மைல்கள் தொலைவில் அமைந்துள்ளது மொரகரோ நகர். இந்த பகுதியில் கடந்த 10-ம் தேதி பெட்ரோல் ஏற்றி சென்ற லாரி ஒன்று திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாது. அதில் இருந்த எரிபொருள் தரையில் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியுள்ளது.

இதனால் அந்த பகுதியில் வசித்து வந்த மக்கள், சாலையில் ஓடிய பெட்ரோலை பாத்திரங்களில் சேகரிக்க முயற்சித்து உள்ளனர். அப்போது டேங்கர் லாரி தீப்பிடித்து பற்றி எரிய தொடங்கியது. பலர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். 

இதனை தொடர்ந்து அதிபர் ஜான் 3 நாட்கள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிப்பு வெளியிட்டார். 

காயமடைந்தவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். கடந்த சனிக்கிழமை வரை 94 பேர் பலியாகியிருந்தனர். நேற்று மேலும் ஒருவர் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 95 ஆக உயர்ந்துள்ளது. தொடர்ந்து 20 பேர் முஹிம்பிலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com