சிரியாவில் கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக உயர்வு

சிரியாவில் நடந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
கார் வெடிகுண்டு தாக்குதல்
கார் வெடிகுண்டு தாக்குதல்
Published on

டமாஸ்கஸ்:

சிரியாவில் குர்திஸ் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருந்த தல் அப்யாட் பகுதியை துருக்கி படையெடுத்து தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தது.  

துருக்கியின் எல்லையோரம் அமைந்துள்ள இப்பகுதியில் குர்திஷ் போராளிகள் , ஐ.எஸ். போன்ற பயங்கரவாத அமைப்புகள் அவ்வப்போது தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர்.

இதற்கிடையே, சிரியா நாட்டின் டெல் அப்யாட் பகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட ஒரு கார் நேற்று திடீரென வெடித்து சிதறியது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் இரு குழந்தைகள் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர் என முதல் கட்டமாக சிரியாவுக்கான மனித உரிமைகள் கண்காணிப்பகம் தகவல் வெளியிட்டது.

இந்நிலையில், கார் வெடிகுண்டு தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com