கோவை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் பலி

கோவை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை அருகே குட்டையில் மூழ்கி மாணவர் பலி
Published on

கோவை:

திருப்பூர் காங்கேயம் ரோடு, சின்ன செம்மேடு பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவர் வசந்த குமார்(வயது 14). பெற்றோரை இழந்த இவர் கோவையை அடுத்த கோவில் பாளையத்தில் உள்ள அரசு விடுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் படித்து வந்தார்.

நேற்று விடுதியில் இருந்து வெளியே சென்ற வசந்தகுமார் வெகு நேரமாகியும் திரும்பவில்லை. இதனால் அவரது நண்பர்கள் அப்ப குதியில் தேடிப் பார்த்தனர். அப்போது கவுசிகா நதியையொட்டிய குட்டையில் மூழ்கிய நிலையில் வசந்த குமார் மிதந்தார். அதிர்ச்சியடைந்த நண்பர்கள் சத்தம் போட்டனர். அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டு வந்து வசந்தகுமாரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

தகவலின்பேரில் கோவில் பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி விசரணை நடத்தினர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் நதியில் தண்ணீர் அதிகமாக ஓடியது. மேலும் அப்பகுதியில் சகதியும் அதிகமாக இருந்துள்ளது.

மாணவர் வசந்தகுமார் குட்டையில் இறங்கிய போது எதிர்பாராதவிதமாக சகதியில் சிக்கி இறந்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com