விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி மரணம்

பாபநாசத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விபத்தில் காயமடைந்த பள்ளி மாணவர் சிகிச்சை பலனின்றி மரணம்
Published on

பாபநாசம்:

பாபநாசம் திருப்பாலைத் துறை மெயின்ரோட்டில் வசித்து வரும் குருநாதன் மகன் குகன் (வயது 15). இவர் பாபநாசத்தில் உள்ள ஒரு மெட்ரிக் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த ஏப்ரல் மாதம்  பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தேர்வு எழுதிவிட்டு தந்தை குருநாதனுடன் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். 

பாபநாசம் கானியாளர் தெரு வழியாக வந்தபோது தியாகசமுத்திரத்தை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் இவர்கள் மீது மோதியது. 

இதில் குகன் பலத்த காயமடைந்தார். உடனே தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குகன் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இது குறித்து பாபநாசம் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

X

Maalai Malar
www.maalaimalar.com