சிங்காரப்பேட்டை அருகே கிணற்றில் தவறி விழுந்து நிறைமாத கர்ப்பிணி பெண் பலி

நிறைமாத கர்ப்பிணி பெண் கிணற்றில் தவறி விழுந்து இறந்த சம்பவம் அவரது உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெண் உயிரிழப்பு
பெண் உயிரிழப்பு
Published on

ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டையை அடுத்த நாயக்கனூர் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 35). விவசாயியான இவருக்கு கடந்த 8 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி சங்கீதா (26) என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். இந்த நிலையில் சங்கீதா மீண்டும் கர்ப்பமானார்.

நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா நேற்று இரவு இயற்கை உபாதை கழிக்க வீட்டில் இருந்து வெளியே நடந்து சென்றார். அப்போது அதேபகுதியில் உள்ள ஒரு விவசாய கிணற்றின் அருகே நடந்து சென்றபோது திடீரென்று கால் தவறி அந்த கிணற்றுக்குள் விழுந்தார். இதில் அவர் நீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தார். வெளியே சென்ற சங்கீதா மீண்டும் வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் வீட்டின் அருகே தேடிபார்த்தனர். அப்போது சங்கீதா கிணற்றில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து உறவினர்கள் சிங்காரப்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் பிணமாக கிடந்த கர்ப்பிணி சங்கீதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com