மதுரையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மதுரையில் தாய் இறந்த துக்கத்தில் மகன் வி‌ஷம் குடித்து தற்கொலை
Published on

மதுரை:

மதுரை ஆரப்பாளையம் மேல மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சிவாஜி செல்வரங்கன் (வயது 58). இவருக்கு திருமணமான 3 மாதத்தில் மனைவி இறந்து விட்டார். இதனால் சிவாஜி செல்வரங்கன் 83 வயது தாயுடன் வசித்து வந்தார்.

சிவாஜி செல்வரங்கனுக்கு தாய் மீது பாசம் அதிகம். இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனின் தாய் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தார்.

தாய் இறந்துபோன துக்கத்தை சிவாஜி செல்வரங்கனால் தாங்க முடியவில்லை. ‘அம்மாவே இறந்து போய்விட்டார். இனிமேல் நான் உயிரோடு இருந்து என்ன பிரயோஜனம்?’ என்று அழுது புலம்பிக் கொண்டே இருந்தாராம்.

இந்த நிலையில் சிவாஜி செல்வரங்கனை காணவில்லை. இதையடுத்து உறவினர்கள் அக்கம், பக்கத்தில் தேடிப்பார்த்தனர். அப்போது வீட்டின் அருகே தகர கொட்டகைக்குள் சிவாஜி செல்வரங்கன் இறந்து கிடந்தார். அவர் பக்கத்தில் குருணை மருந்து டப்பா கிடந்தது.

இதனையடுத்து உறவினர்கள் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வந்து பார்த்து சிவாஜி செல்வரங்கன் இறந்ததை உறுதிப்படுத்தினர்.

இது தொடர்பாக சிவாஜி செல்வரங்கனின் சகோதரர் பிரபாகரன் கரிமேடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்டது அந்தப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com