மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பலி

தர்மபுரி மாவட்ட உள்விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரையில் இருந்து தவறி கீழே விழுந்த கூலித்தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
பலி
பலி
Published on

தர்மபுரி:

தர்மபுரி கோட்டை பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது29). கூலித் தொழிலாளி. தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள்விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரை உடைந்திருந்தது. அதனை சரிசெய்வதற்காக வந்த கோபி உள் விளையாட்டு அரங்கத்தின் மேற்கூரையின் மீது ஏறினார். அப்போது அவர் மேற்கூரையில் இருந்து திடீரென்று தவறி கீழே விழுந்தார். 

இதில் பலத்த காயம் அடைந்த கோபியை உடனே அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சேர்த்தனர். 

பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நள்ளிரவு பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com