

பழனி:
பழனி - தாராபுரம் ரோட்டில் புளியம்பட்டி அருகே வி.பி.எஸ். குவாரி உள்ளது. இந்த குவாரியில் இன்று காலை சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஆண் கொலை செய்யப்பட்டு கிடந்தார். காலையில் குவாரிக்கு வேலைக்கு வந்த தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.
இது குறித்து கீரனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் உடலை மீட்டு பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் யார்? எந்த ஊர்? என்ற விபரம் தெரியவில்லை. உள்ளாடை மட்டுமே அணிந்திருந்தார். போதையில் ஏற்பட்ட தகராறில் அவரை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். பழனி பகுதியில் வெளியூர் வியாபாரிகள் பலர் தங்கி பொருட்கள் விற்பனை செய்து வருகின்றனர். இதனால் அது போன்ற நபராக இருக்கலாம் எனவும் தெரிய வந்துள்ளது. கொலை செய்யப்பட்டவர் யார்? கொலையாளிகள் யார்? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.