திண்டுக்கல் அருகே வியாபாரியை கொன்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

திண்டுக்கல் அருகே வியாபாரியை கொன்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யபட்டனர்.
திண்டுக்கல் அருகே வியாபாரியை கொன்ற வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

குள்ளனம்பட்டி:

திண்டுக்கல் அருகே உள்ள வி.எஸ். கோட்டை பகுதியை சேர்ந்தவர் அமல்ராஜ். மாட்டு வியாபாரி. இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொலை செய்யபட்டார்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக நத்தம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராம்நாராயணன் தலைமையிலான போலீசார் மார்க்கம் பட்டியை சேர்ந்த சக்திவேல் (வயது 50), பாண்டியராஜ் (49) ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. எனவே இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

கலெக்டர் வினய் உத்தரவின் பேரில் சக்திவேல், பாண்டியராஜ் ஆகியோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com