வடகொரியாவுடன் சமாதானம் ஏற்பட்டால் உலகத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும் - டிரம்ப் நம்பிக்கை

வடகொரியாவுடன் சமாதானம் ஏற்பட்டால் இந்த உலகத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வடகொரியாவுடன் சமாதானம் ஏற்பட்டால் உலகத்துக்கு மிகுந்த நன்மை ஏற்படும் - டிரம்ப் நம்பிக்கை
Published on

அணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகளை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளை மிரட்டிவரும் வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்-னுடன் அமர்ந்து சமாதானம் பேசுவதற்கு தயாராக இருப்பதாக சமீபத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

ஆனால், அதற்கு முன்னதாக அணு ஆயுதங்களை பயன்படுத்த மாட்டோம் என வடகொரியா வாக்குறுதி அளிக்க வேண்டும் என்றும் அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

இதுதொடர்பாக, கருத்து தெரிவித்துள்ள அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ், டிரம்ப்பின் முடிவால் வடகொரியாவின் அணு ஆயுத அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பின்னர், டிரம்ப்பும் வடகொரியா அதிபரும் இணைந்து புகைப்படங்களுக்கு போஸ் அளித்தால் அது நேச நாடுகளுடனான அமெரிக்காவின் உறவுகளில் முறிவை ஏற்படுத்துவதுடன், பேரழிவாகவும் அமைந்துவிடும் என குறிப்பிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com