மகளை பலாத்காரம் செய்ததால் கூலித்தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை

மகளை பலாத்காரம் செய்ததால் கூலித்தொழிலாளியை ஓட ஓட விரட்டி படுகொலை செய்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.
மகளை பலாத்காரம் செய்ததால் கூலித்தொழிலாளி ஓட ஓட வெட்டிக் கொலை
Published on

உத்தமபாளையம்:

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகில் உள்ள சீலையம்பட்டியை சேர்ந்தவர் ரத்தினவேல் பாண்டியன் (வயது45). கூலித் தொழிலாளி. இவரது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசித்து வந்தவர் கோச்சடையான். இவரது மகள் மாற்றுத்திறனாளி. அவரை ரத்தினவேல்பாண்டியன் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு தனியாக இருக்கும் சமயத்தில் பலமுறை பலாத்காரம் செய்துள்ளார்.

இந்த வி‌ஷயம் கோச்சடையான் மற்றும் அவரது உறவினர்களுக்கு தெரிய வரவே ரத்தினவேல் பாண்டியனை கண்டித்தனர்.

பின்னர் ஊர் பெரியவர்கள் மத்தியில் சமரசம் பேசி ரத்தினவேல்பாண்டியனை எச்சரித்து விட்டு விட்டனர். அதன்பிறகு சில மாதங்களிலேயே கோச்சடையான் மகள் இறந்து விட்டார்.

அப்போது முதல் ரத்தினவேல்பாண்டியன் மீது கோச்சடையான் முன்விரோதத்தில் இருந்து வந்தார். இன்று காலை ரத்தினவேல்பாண்டியன் தோட்டத்திற்கு செல்வதற்காக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது கோச்சடையான் மற்றும் 2 பேர் அவரை அரிவாளால் வெட்ட முயன்றனர். உயிருக்கு பயந்து ரத்தினவேல்பாண்டியன் ஓடினார். இருந்தபோதும் அவரை ஓட ஓட விரட்டி வெட்டி கொன்றனர்.

இது குறித்து சின்னமனூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பி ஓடிய நபர்களை தேடி வருகின்றனர். அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com