பொள்ளாச்சியில் மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை

மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
பொள்ளாச்சியில் மகள் காதல் திருமணம் செய்ததால் மனமுடைந்த பெற்றோர் தற்கொலை
Published on

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி பாலக்காடு சாலையில் உள்ள சக்தி கார்டன் பகுதியை சேர்ந்தவர் அகத்தூர்சாமி (63), விவசாயி. இவரது மனைவி சொர்ணலதா(50).இவர்களுக்கு சினேகா(23) என்ற மகள் உள்ளார். என்ஜினீயரிங் படித்து முடித்த சினேகா பெற்றோர் எதிர்ப்பை மீறி ஒரு வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

ஒரே மகளும் தங்களது பேச்சை கேட்கவில்லையே என அகத்தூர் சாமியும், சொர்ணலதாவும் மனம் உடைந்து காணப்பட்டனர்.

நேற்று மாலை வீட்டில் இருவரும் வி‌ஷம் குடித்தனர். பின்னர் அங்கலக்குறிச்சியில் உள்ள உறவினர்களுக்கு போன் செய்து தாங்கள் வி‌ஷம் குடித்த தகவலை தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் பொள்ளாச்சிக்கு விரைந்து சென்றனர். அங்கு வீட்டில் இருவரும் மயங்கி கிடந்தனர்.

இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அகத்தூர் சாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொர்ணலதா மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் பொள்ளாச்சி தாலுகா மேற்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com