செய்யாறு அருகே மகள் காதல் திருமணம்- தாய் தற்கொலை

செய்யாறு அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை
தற்கொலை
Published on

செய்யாறு:

செய்யாறு அடுத்த இளநீர்குன்றம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி மனோன்மணி. இவர்களது மகள் மகாலட்சுமி (22). ராஜேந்திரன் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இந்த நிலையில் மகாலட்சுமி அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார்.

கடந்த வாரம் அவரை திருமணம் செய்து கொண்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த மனோன்மணி நேற்று முன்தினம் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதனை கண்ட அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். 

இது குறித்து அனக்காவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com