மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை

கோவை ரத்தினபுரி அருகே மகள் காதல் திருமணம் செய்ததால் வேதனை அடைந்த தொழிலாளி தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மகள் காதல் திருமணம் செய்ததால் தொழிலாளி தற்கொலை
Published on

கோவை:

கோவை ரத்தினபுரி அருகே உள்ள பழனிகவுண்டர் வீதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 48). கூலித் தொழிலாளி. இவரது மகள் கடந்த 5 நாட்களுக்கு முன்பு பெற்றோர் எதிர்ப்பை மீறி வாலிபர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மகள் காதல் திருமணம் செய்ததால் ஆறுமுகம் கடந்த சில நாட்களாக மனவேதனை அடைந்து காணப்பட்டார்.

சம்பவத்தன்று வீட்டில் இருந்த அவர் வாழ்க்கையில் விரக்தி அடைந்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் இது குறித்து ரத்தினபுரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து தற்கொலை செய்து கொண்ட ஆறுமுகத்தின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

X

Maalai Malar
www.maalaimalar.com