மகள் இறந்த துக்கம் தாங்காமல் டேங்க் ஆப்ரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை

உடல் நலக்குறைவால் மகள் இறந்து விட்டதால் துக்கம் தாங்காமல் டேங்க் ஆப்ரேட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

தருமபுரி:

தருமபுரி குமாரசாமி பேட்டை பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது50). இவர் நகராட்சியில் தண்ணீர் திறந்து விடும் டேங்க் ஆப்ரேட்டராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி ஜெயா. இவர்களது மகள் புஷ்பலதா கடந்த சில மாதங்களுக்கு முன்பு உடல் நலக்குறைவு காரணமாக இறந்து விட்டார். 

இதனால் மனமுடைந்து காணப்பட்ட மாணிக்கம் கடந்த 2 முறை தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த குடும்பத்தினர் அவருக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்து வைத்தார். இதையடுத்து தனது மகள் இறந்த துக்கம் தாங்காமல் நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மாணிக்கம் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரத்தினகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் தூக்கில் பிணமாக கிடந்த மாணிக்கம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com