கும்பகோணத்தில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை

கும்பகோணத்தில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தாய் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கும்பகோணத்தில் மகள் இறந்த துக்கம் தாங்காமல் தாய் தற்கொலை
Published on

சுவாமிமலை:

கும்பகோணம் பாணாத்துறை தெற்கு தெருவை சேர்ந்தவர் இன்பராஜ். இவரது மனைவி பானுமதி (55). இவரது மூத்த மகள் சமீபத்தில் இறந்து விட்டார்.

இதனால் பானுமதி மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த 10-ந் தேதி வி‌ஷம் குடித்து மயங்கி கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

ஆனால் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து பானுமதியின் இளைய மகள் வனிதா கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com