மூலகுளத்தில் நடன குழுவினரை தாக்கி நகை பறிப்பு

மூலகுளத்தில் நடன குழுவினரை தாக்கி நகையை ரவுடி கும்பல் பறித்து சென்றது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை பறிப்பு
நகை பறிப்பு
Published on

புதுச்சேரி:

சென்னை தாம்பரத்தை சேர்ந்தவர் தில்லைஆனந்து. இவரது மனைவி தபசும்சல்மா (வயது31). இவர்கள் இருவரும் ஆர்க்கெஸ்ட்ரா  மற்றும் நடனகலை குழுவை நடத்தி வருகிறார்கள். நேற்று மாலை இவர்கள் பாக்கம் கூட்டுரோட்டில் நடைபெற்ற உறவினரின்  திருமண நிகழச்சிக்கு புதுவைக்கு வந்தனர். புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் விடுதியில் ரூம் வாடகை எடுத்து  தங்கினர். இவர்களுடன் உறவினர் பெண் திவ்யா என்பவரும் வந்திருந்தார். 

திவ்யா பச்சை குத்தி கொள்ள விரும்பியதால் அவரை மூலகுளம் திருமலைவாசன் நகரில் உள்ள பச்சை குத்தும் இடத்துக்கு தில்லை ஆனந்தும், அவரது நண்பர் தினேஷ் மற்றும் தபசும்சல்மா ஆகியோர் அழைத்து சென்றனர். அப்போது திவ்யாவுக்கு பச்சைகுத்தி  கொண்டு இருந்த போது அங்கு 2 பேர் வந்தனர். அவர்கள் பிரபல ரவுடியின் பெயரை சொல்லி தபசும்சல்மா அணிந்திருந்த  தங்கநகைகளை கழற்றி கொடுக்கும்படி மிரட்டினர்.  மேலும் அவர்கள் 4 பேரையும் முட்டி போட வைத்து  தாக்கியதோடு தபசும்சல்மா அணிந்திருந்த  தங்கசெயின் மற்றும் மோதிரத்தை  வலுக்கட்டாயமாக பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து தபசும்சல்மா ரெட்டியார்பாளையம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி  வருகிறார்கள்.  

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com