புரோ கபடி லீக்கில் மும்பையுடனான ஆட்டம் சமன் - புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது டெல்லி

புரோ கபடி லீக் தொடரில் நொய்டாவில் இன்று நடந்த லீக் ஆட்டத்தில் மும்பையுடனான போட்டியை சமன் செய்த டெல்லி புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்தது.
பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்
பாயிண்ட் எடுக்க போராடும் வீரர்கள்
Published on

7-வது புரோ கபடி லீக் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் நொய்டாவில் இன்று இரவு நடந்த 131-வது லீக் ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் யு மும்பை அணிகள் மோதின.

ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே இரு அணி வீரர்களும் சிறப்பாக ஆடினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 37-37 என சமனில் முடிந்தது.

இதையடுத்து, புரோ கபடி லீக் போட்டியின் புள்ளிப் பட்டியலில் தபாங் டெல்லி அணி முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது.

மற்றொரு போட்டியில், பெங்களூரு புல்சை 45-33 என்ற கணக்கில் வீழ்த்தி யுபி யோதா அணி வெற்றி பெற்றது. இன்றுடன் புரோ கபடியின் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. பிளே ஆப் சுற்று ஆட்டங்கள் 14ம் தேதி தொடங்குகின்றன.

X

Maalai Malar
www.maalaimalar.com