இ.கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா
இ.கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா

குடியுரிமை சட்டத்துக்கு எதிராக 19-ம் தேதி இடதுசாரி கட்சிகள் நாடுதழுவிய போராட்டம்

இடதுசாரி கட்சிகள் சார்பில் 19-ம் தேதி நடைபெறும் போராட்டத்தில் அனைத்து மதச்சாபற்ற, ஜனநாயக சக்திகளும் பங்கேற்க வேண்டுமென இ.கம்யூனிஸ்ட் தலைவர் டி.ராஜா அழைப்பு விடுத்துள்ளார்.
Published on

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை கண்டித்து இன்று திருவனந்தபுரம் தியாகிகள் நினைவிடம் அருகே நடைபெற்ற போராட்டத்தில் கேரளா முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

குடியுரிமை சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று கொல்கத்தாவில் பேரணி நடைபெற்றது.


தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் நாளை நடைபெறவிருக்கும் திருத்தப்பட்ட குடியுரிமை சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் அணி திரள்வோம் என்று தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையில், திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்துக்கு எதிராக திரிபுரா முன்னாள் மன்னரின் மகன், ஜெய்ராம் ரமேஷ் உள்ளிட்டோர் சுப்ரீம் கோர்ட்டில் தொடர்ந்த வழக்குகள் 18-ம் தேதி விசாரிக்கப்படவுள்ளன.

இந்நிலையில், வரும் 19-ம் தேதி இடதுசாரி கட்சிகள் சார்பில் நாடு தழுவிய அளவில் நடைபெறும் மிகப்பெரிய போராட்டத்தில்  மதச்சாபற்ற, ஜனநாயக ரீதியிலான அனைத்து சக்திகளும் பங்கேற்குமாறு இ.கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் டி.ராஜா இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com