கிருமாம்பாக்கத்தில் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாப பலி

கிருமாம்பாக்கத்தில் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாபமாக இறந்து போனார்.
கிருமாம்பாக்கத்தில் சைக்கிள் மீது லாரி மோதியதில் விவசாயி பரிதாப பலி
Published on

பாகூர்:

பாகூர் அருகே குருவி நத்தம் கிராமம் பிடாரி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 57). விவசாயி.

நேற்று காலை இவர் சவுக்கை நாற்று வாங்க கிருமாம்பாக்கம் அருகே பிள்ளையார் குப்பத்துக்கு சைக்கிளில் சென்றார்.

கிருமாம்பாக்கத்தில் வந்த போது பின்னால் கடலூரில் இருந்து புதுவை நோக்கி வந்த லாரி எதிர்பாராத விதமாக சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சைஅளித்தும் பலனின்றி பூமிநாதன் நேற்று இரவு பரிதாபமாக இறந்து போனார்.

இந்த விபத்து குறித்து கிருமாம்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி சப்-இன்ஸ்பெக்டர் பச்சையப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com