

புவனேஷ்வர் குமாருக்கு காயம் ஏற்பட்டதால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் முகமது ஷமிக்கு வாய்ப்பு கிடைத்து. இக்கட்டான நிலையில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார். அத்துடன் 40 ரன்கள் விட்டுக்கொடுத்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தினார்.
இந்நிலையில் சச்சின் தெண்டுல்கரின் பேச்சுதான் ஷமிக்கு உத்வேகமாக அமைந்துள்ளது. இதுகுறித்து சச்சின் தெண்டுல்கர் கூறுகையில் ‘‘கடுமையாக பயிற்சி செய்ய வேண்டும். அதில் எந்த தொய்வும் ஏற்பட்டுவிடக் கூடாது. ஆடும் லெவனில் இடம் கிடைக்கும்போது, சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்த தயாராக இருக்க வேண்டும்.
உங்களுடைய நேரம் வரும். அந்த நேரத்தை மிகவும் விரைவாக பெறுவீர்கள். புவி காயத்தை நான் விரும்பவில்லை. என்றாலும், உங்களுக்கு வாய்ப்பு வந்துள்ளது என்றேன்.