சின்னமனூரில் வாழைத்தார் திருடியவருக்கு அரிவாள் வெட்டு

சின்னமனூரில் வாழைத்தார் திருடியவரை அரிவாளால் வெட்டியவர் கைது செய்யப்பட்டார்.
வாழைக்குலை
வாழைக்குலை
Published on

தேனி:

தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே உள்ள பூக்கடை சந்து பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி (வயது 57). இவர் வாழைத் தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். துர்க்கையம்மன் கோவில் அருகே மதியழகன் என்பவருக்கு சொந்தமான வாழைத் தோப்பு உள்ளது.

சம்பவத்தன்று அங்கிருந்த ஒரு வாழைத்தாரை காணவில்லை. அதனை பாண்டிதான் எடுத்திருக்க வேண்டும் என மதியழகன் சந்தேகப்பட்டார்.

இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த மதியழகன், பாண்டியை கீழே தள்ளி அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை மிரட்டல் விடுத்தார். படுகாயமடைந்த பாண்டி சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பாண்டி கொடுத்த புகாரின் பேரில் சின்னமனூர் போலீசார் வழக்குபதிவு செய்து மதியழகனை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com