பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: சென்சார் குழுவுக்கு மத்திய மந்திரி பரிந்துரை

இந்திய வரலாற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை குழுவுக்கு மத்திய மந்திரி அறிவுறுத்தியுள்ளார்.
பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும்: சென்சார் குழுவுக்கு மத்திய மந்திரி பரிந்துரை
Published on

ராஜஸ்தான் மாநிலத்தில் சித்தூரை ஆண்ட ராணி பத்மினியின் வாழ்க்கையை மையமாக கொண்டு ‘பத்மாவதி’ என்ற படம் தயாராகி அடுத்த மாதம் 1-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த படத்திற்காக ராணி பத்மினியின் வரலாறு திரிக்கப்பட்டுள்ளதாக ராஜபுத்திர வம்சத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் ‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு தணிக்கை சான்றிதழ் பெறுவதற்காக படத்தின் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி அதை மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த வாரம் அனுப்பி இருந்தார்.

ஆனால், திடீர் திருப்பமாக சான்றிதழ் விண்ணப்பத்தில் குறைகள் இருப்பதாக கூறி அந்த விண்ணப்பத்தை இயக்குனருக்கு சான்றிதழ் வாரியம் திருப்பி அனுப்பி உள்ளது. ஆனால், அதில் என்ன குறை? என்பது குறித்து அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர். இதனால் அந்த படத்துக்கு தணிக்கை சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள இந்தூர் நகரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை மந்திரி தவார் சந்த் கேலாட், பத்மாவதி படத்தில் இருந்து சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என திரைப்பட தணிக்கை குழுவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com