கம்பத்தில் ரகளை செய்ததை தட்டி கேட்ட மூதாட்டி மீது தாக்குதல்

கம்பத்தில் ரகளை செய்ததை தட்டி கேட்ட மூதாட்டியை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கைது
கைது
Published on

தேனி:

கம்பம் வி.ஏ.ஓ. அலுவலகம் பின்புறம் கிராமச்சாவடி தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம் மனைவி மருதாயம்மாள் (வயது70). இவர் நடந்து சென்றபோது அதே பகுதியை சேர்ந்த முருகவேல் என்பவர் குடிபோதையில் தொந்தரவு ஏற்படும் படி ரகளை செய்துள்ளார். இதனை மருதாயம்மாள் தட்டி கேட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த முருகவேல் அவரை தாக்கினார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகவேலை கைது செய்தனர்.

தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் அமர்நாத் (வயது28). இவரது நண்பர் அஜித்குமார் (27). 2 பேரும் ராட்டிணம் மைதானம் அருகில் போக்குவரத்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வண்ணம் சத்தம் போட்டுக்கொண்டிருந்தனர். அவர்களை வீரபாண்டி சப்-இன்ஸ்பெக்டர் கைது செய்து விசாரித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com