கம்பத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை-பணம் கொள்ளை

கம்பத்தில் ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வீட்டில் நகை- பணம் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.
கொள்ளை நடந்த வீட்டில் பொருட்கள் சிதறி கிடக்கும் காட்சி.
Published on

கம்பம்:

கம்பம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கந்தசாமி (வயது 70). இவர் ஓய்வு பெற்ற வங்கி மேலாளர். இவரது மனைவிக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டது. எனவே அவரை மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தார். அவருக்கு துணையாக கந்தசாமியும் இருந்ததால் தனது வீட்டை பூட்டிச் சென்றிருந்தார்.

இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வெளிப்புற கம்பிக்கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த 3 பவுன் தங்க செயின், பூஜை அறையில் இருந்த 2 வெள்ளி குத்து விளக்கு, வெள்ளி டம்ளர், ரொக்கப்பணம் ரூ.4 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்துச் சென்றனர்.

வீடு திறந்து கிடந்தது கண்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் கந்தசாமிக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வீட்டுக்கு வந்து பார்த்த போது நகை பணம் கொள்ளை போனது கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் புகார் அளித்தார்.

கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.34 ஆயிரத்து 500 ஆகும். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com