மடத்துக்குளம் பகுதியில் 2 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெல் விதைகள் தற்போது நன்கு வளர்ந்துள்ளது.
கோப்புபடம்
கோப்புபடம்
Published on

மடத்துக்குளம்-,:

மடத்துக்குளம் அமராவதி ஆயக்கட்டு பகுதியில் நெல் பிரதான பயிராக உள்ளது. குறுவை, சம்பா என இரண்டு பருவத்தில் இங்கு நெல் நடவு செய்யப்படுகிறது.

தற்போது குறுவை சாகுபடியில் கொமரலிங்கம், கண்ணாடிப்புத்தூர், மடத்துக்குளம், சோழமாதேவி, கணியூர், கடத்தூர், காரத்தொழுவு உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த சாகுபடி நடந்துள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில்:

குறைந்த வயதுடைய நெல் ரகங்களான ஏ.டி.டி. (ஆர்) 45, கோ 51, கோ (ஆர்) 50, ஏ.எஸ்.டி.16, ஏ.டி.டி. 37 உள்ளிட்ட நெல் ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.

இரண்டு மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட நெல் விதைகள் தற்போது நன்கு வளர்ந்துள்ளது. அக்டோபர் மாதத்தில் அறுவடை தொடங்க திட்டமிட்டுள்ளோம். பருவநிலை கை கொடுப்பதால் நல்ல விளைச்சலை எதிர்பார்த்துள்ளோம் என்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com