

அரியானா மாநிலத்தில் வரும் மே 12ம் தேதி ஒரே கட்டமாக பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் முக்கிய தலைவர்களும், பல்வேறு தொகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரியானா மாநிலத்தில் பதேபாத் பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசார கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்துக் கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
உலகில் ஏதேனும் ஒரு நாட்டினை, பாதுகாப்பு இல்லை என்றால் சக்திவாய்ந்த நாடு என கருத முடியுமா? , மகா கூட்டணியோ அல்லது காங்கிரசோ பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தான் பேச முடியுமா? நிச்சயம் முடியாது. அவர்கள் வரலாற்றில் கூட நாட்டின் பாதுகாப்பு பற்றி எடுத்துரைக்க முடியாது.
அதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன. இதை எண்ணி ஆறுதல் அடைகிறேன். ஆனால் காங்கிரசோ, இந்த குற்றங்களில் ஈடுபட்டவர்களை பாராட்டி பேசுகிறது. இதிலிருந்தே அவர்களுக்கு மக்களின் உணர்வுகள் குறித்து எந்த கவலையும் இல்லை என்பது புரிகிறது.
மக்கள் என் மீதும், பாஜக மீதும் கொண்டுள்ள நம்பிக்கையினை நான் உணர்வேன். பாஜக மீண்டும் மத்தியில் ஆட்சி அமைப்பது உறுதியாகிவிட்டது. உங்களுக்காக இந்த காவலாளி என்றும் பணியாற்றுவான்.