தடுமாற்றத்துடன் தொடங்கி, நிமிர்ந்து வருகிறது வங்காள தேசம்

சாம்பியன்ஸ் டிராபி அரையிறுதியில் 31 ரன்னுக்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்த வங்காள தேசம், தமீம் இக்பால் அரைசதத்தால் நிமிர்ந்து வருகிறது.
தடுமாற்றத்துடன் தொடங்கி, நிமிர்ந்து வருகிறது வங்காள தேசம்
Published on

முதல் ஓவரின் கடைசி பந்தில் சவுமியா சர்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து சபிர் ரஹ்மான் களம் இறங்கினார். அவர் களம் இறங்கியதில் இருந்து அதிரடியாக விளையாடினார். தமீம் இக்பால் நிதானத்தை கடைபிடித்தார்.

வங்காள தேசம் 6.5 ஓவரில் 31 ரன்கள் எடுத்திருக்கும்போது 2-வது விக்கெட்டை இழந்தது. அதிரடியாக விளையாடிய சபிர் ரஹ்மான் 21 பந்தில் 19 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

3-வது விக்கெட்டுக்கு தமீம் இக்பால் உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். 9-வது ஓவரை புவனேஸ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் முஸ்பிகுர் ரஹிம் தொடர்ச்சியாக மூன்று பவுண்டரிகள் விரட்டினார்.

முதல் 10 ஓவரில் வங்காள தேசம் 2 விக்கெட் இழப்பிற்கு 47 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது தமீம் இக்பால் 30 பந்தில் 11 ரன்கள் எடுத்திருந்தார். 13-வது ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். இந்த ஓவரில் தமீம் இக்பால் க்ளீன் போல்டானார். ஆனால், அது நோ-பாலாக அறிவிக்கப்பட்டதால் தமீம் இக்பால் அவுட்டில் இருந்து தப்பினார்.


சபிர் ரஹ்மானை அவுட்டாக்கிய சந்தோஷத்தில் இந்திய வீரர்கள்

18 ரன்னில் இருக்கும்போது கண்டத்தில் இருந்து தப்பிய தமீம் இக்பால் அதன்பின் அடிரடியாக விளையாட ஆரம்பித்தார். இருவரின் சிறப்பான ஆட்டத்தால் வங்காள தேசம் 18.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரின் கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்டி தமீம் இக்பால் அரைசதம் அடித்தார். முன்னணி பந்து வீச்சாளர்களுக்கு பந்து எடுபடாததால் கேதர் ஜாதவ் பந்து வீச அழைக்கப்பட்டார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com