ஐபிஎல் கிரிக்கெட் - சென்னை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா

ராகுல் திரிபாதி அரை சதமடிக்க, சென்னை அணி வெற்றி பெற 168 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கொல்கத்தா அணி.
அரை சதமடித்து அசத்திய ராகுல் திரிபாதி
அரை சதமடித்து அசத்திய ராகுல் திரிபாதி
Published on

அபுதாபி:

ஐபிஎல் 2020 சீசனின் 21-வது லீக் ஆட்டம் அபுதாபியில் இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

7 மணிக்கு டாஸ் சுண்டப்பட்டது. இதில் கொல்கத்தா அணி கேப்டன் தினேஷ் கார்த்திக் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

தொடக்க ஆட்டக்காரர்களாக ஷுப்மான் கில், ராகுல் திரிபாதி களமிறங்கினர்.

பொறுப்புடன் ஆடிய ராகுல் திரிபாதி அரை சதமடித்தார். ஷுப்மான் கில் 11 ரன்னிலும், நிதிஷ் ரானா 9 ரன்னிலும், சுனில் நரைன் 17 ரன்னிலும், மார்கன் 7 ரன்னிலும், ஆண்ட்ரே ரசல் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

சிறப்பாக ஆடிய ராகுல் திரிபாதி 81 ரன்னில் வெளியேறினார். 

இறுதியில், கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 167 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

சென்னை அணி சார்பில் பிராவோ 3 விக்கெட்டும், ஷர்மா, ஷர்துல் தாக்குர், சாம் கரன் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

X

Maalai Malar
www.maalaimalar.com