செய்திகள்
மேற்கு வங்காளம் ரெயில் பாதையில் வெடிகுண்டு விபத்து - ஒருவர் காயம்
மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள டம் டம் ரெயில் பாதையில் இன்று ஏற்பட்ட வெடிகுண்டு விபத்தில் ஒருவர் காயமடைந்தார்.
மேற்கு வங்காளம் மாநிலம் வடக்கு 24 பர்கனா மாவட்டத்தில் உள்ள டம் டம் ரெயில் நிலையத்திற்கு அருகே இன்று காலை குண்டு வெடித்தது. இந்த விபத்தில் ஒருவர் படுகாயமடைந்தார்.
டம் டம் காண்டான்மெட் மற்றும் டம் டம் ஜங்சன் இடையே உள்ள ரெயில் பாதையில் இரும்பு பெட்டி கிடந்துள்ளது. அதனை பாசுதேப் பிஸ்வாஸ் என்ற வாலிபர் இன்று காலை திறந்து பார்த்தார். பெட்டியை திறந்தவுடன் அதிலிருந்த குண்டு வெடித்தது. படுகாயமடைந்த அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவலறிந்து வந்த வெடிகுண்டு பாதுகாப்பு படையினர் சோதனையில் ஈடுபட்டனர். அங்கிருந்து மேலும் 29 குண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews

