டெல்லியில் உயர் அதிகாரியை சுட்டுக்கொன்று மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தற்கொலை

டெல்லியில் உயர் அதிகாரியை சுட்டுக்கொன்று மத்திய ரிசர்வ் படை சப்-இன்ஸ்பெக்டர் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை
தற்கொலை
Published on

புதுடெல்லி:

தேசிய தலைநகர் டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் வீட்டு விவகாரங்கள் துறை அமைச்சகத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள பங்களாவில், மத்திய ரிசர்வ் படை (சி.ஆர்.பி.எப்.) போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு நேற்று முன்தினம் இரவு அரியானாவை சேர்ந்த இன்ஸ்பெக்டர் தஷ்ரத் சிங்(வயது 56), காஷ்மீரை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் கர்னைல் சிங்(55) ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது அவர்கள் இருவருக்குமிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனால் ஆத்திரம் அடைந்த கர்னைல் சிங் தான் வைத்திருந்த துப்பாக்கியால் உயர் அதிகாரியான தஷ்ரத் சிங்கை நோக்கி சுட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து கர்னைல் சிங் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த ராணுவ அதிகாரிகள் மற்றும் உள்ளூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக போலீசார் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com