ஜெயலலிதா மரணம்- விசாரணை ஆணையத்தில் தீபாவிடம் குறுக்கு விசாரணை

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தில் தீபாவிடம் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். #JayaDeathProbe #Deepa
விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்காக தீபா வக்கீல்களுடன் வந்தார்.
விசாரணை ஆணையத்தில் ஆஜராவதற்காக தீபா வக்கீல்களுடன் வந்தார்.
Published on

சென்னை:

மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அதுபற்றி அறிந்தவர்கள் நீதிபதி ஆறுமுகசாமி முன்பு ஆஜராகி வாக்குமூலம் அளித்து வருகிறார்கள். சசிகலா தரப்பு வக்கீல் அவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்துகிறார்.

ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த அப்பல்லோ டாக்டர்கள், எய்ம்ஸ் மருத்துவர்கள், அரசு அதிகாரிகள், அருகில் இருந்து கவனித்து கொண்ட செவிலியர்கள், சசிகலாவின் உறவினர்கள் உள்பட பலரிடம் விசாரணை நடந்துள்ளது.

இந்த விசாரணைக்கு ஆஜராக வேண்டியவர்களுக்கு ஆணையம் சம்மன் அனுப்பி வருகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கும் சம்மன் அனுப்பப்பட்டது.

இதையடுத்து அவர் இன்று ஆறுமுகசாமி ஆணையத்தில் ஆஜரானார். அவரிடம் சசிகலா தரப்பு வக்கீல் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை செய்தார்.

ஜெயலலிதா மரணம் தொடர்பாக தி.மு.க. சார்பில் வழக்கு தொடர்ந்த டாக்டர் சரவணனும் இன்று ஆஜர் ஆனார். அவரிடமும் சசிகலா தரப்பு வக்கீல் குறுக்கு விசாரணை செய்தார். வக்கீல் ஜோசப்பும் ஆஜரானார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. #JayaDeathProbe #Deepa

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com