மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல்

மெக்சிகோவில் 7.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு கிறிஸ்டியானோ ரொனால்டோ இரங்கல் தெரிவித்துள்ளார்.
மெக்சிகோ நிலநடுக்கத்தில் உயிரிழந்த தீவிர ரசிகனான சிறுவனுக்கு ரொனால்டோ இரங்கல்
Published on

மெக்சிகோவில் கடந்த சில நாட்களுக்கு முன் 7.1 ரிக்டர் அளவில் கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சுமார் 300-க்கு மேற்பட்டோர் பலியானார்கள். ஒரு பள்ளிக்கூடம் இடிந்து விழுந்தது. இதில் 20-க்கும் மேற்பட்ட பள்ளிச் சிறுவர்கள் உயிரிழந்தனர். அதில் ஒருவன் சான்டியாகோ பிளோர்ஸ் மோராவும் ஒருவர்.

இவன் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் தீவிர ரசிகனாக இருந்துள்ளார். அவரை ஒரு ஐடியாலாஜியாக வைத்து வளர்ந்துள்ளார்.

இதுகுறித்து சான்டியாகோ பிளோர்ஸின் அம்மா ரொனால்டோவிற்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் கூறுகையில் ‘‘எனது மகன் உங்களுடைய தீவிரமான ரசிகனாக இருந்தான். எங்கேயும் உங்களுடைய பெயரைத்தான் எழுதுவான். இறப்பதற்கு முன்பாக பள்ளிக்கூட நோட்டில் சான்டியாகோ பிளோர்ஸ் மோரா கிறிஸ்டியானோ ரொனால்டோ என்று எழுதியிருந்தான்.

எனது மகனுடைய கனவே உங்களை சந்திக்க வேண்டும் என்பதுதான். உங்களை பார்க்க வரவேண்டிய எனது மகன், தற்போது கடவுளோடு சென்றுவிட்டான். நாங்கள் பண உதவியோ, புகழோ அல்லது கவனத்தை ஏற்படுத்தவோ விரும்பவில்லை. ஒரே விஷயம், கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது மகன் குறித்து அறிய வேண்டும் என்பதுதான். ஏனென்றால், துரதிருஷ்டவசமாக அவனது கனவு நிறைவேறவில்லை.

இந்த அம்மாவின் கடிதம் சமூக இணையத்தளங்கள் மூலம் கிறிஸ்டியானோ ரொனால்டோ கவனத்திற்கு சென்றது.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, ரியல் மாட்ரிட் அணிக்காக அணிந்து விளையாடும் தனது ஜெர்சியில் ‘‘பாசமிகு எனது நம்பர் ஒன் ரசிகன் சான்டியாகோவிற்காக’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com