ஹர்பஜன் சிங் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தனது வாக்கை பதிவு செய்தார்.
ஹர்பஜன் சிங் வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார்
Published on

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் ஹர்பஜன் சிங். இவர் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இவரது சொந்த மாநிலம் பஞ்சாப். இன்று பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. ஹர்பஜன் சிங் ஜலந்தரில் உள்ள கார்கி கிராமத்தில் உள்ள வாக்குச்சாவடிக்கு சென்றார். அங்கு வரிசையில் நின்று தனது வாக்கை பதிவு செய்தார். பஞ்சாபில் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய மூன்று கட்சிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com