கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் வீரர் ஷர்ஜீல்கானுக்கு 5 ஆண்டுகள் தடை

‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷர்ஜீல்கானுக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
கிரிக்கெட் சூதாட்டம்: பாகிஸ்தான் வீரர் ஷர்ஜீல்கானுக்கு 5 ஆண்டுகள் தடை
Published on

கராச்சி :

பாகிஸ்தான் சூப்பர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த பிப்ரவரி மாதத்தில் துபாயில் நடந்தது. இந்த போட்டியின் போது ‘ஸ்பாட் பிக்சிங்’ சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் ஷர்ஜீல்கான் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்.

இந்த சூதாட்ட விவகாரம் குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு தீர்ப்பாயம் விசாரணை நடத்தியது. விசாரணை முடிவில் ஷர்ஜீல்கானுக்கு 5 ஆண்டுகள் விளையாட தடை விதித்து தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com