பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க். கம்யூனிஸ்டு கோரிக்கை

கோவையில் சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது. #GirlHarassment
பாலியல் கொடுமை செய்து சிறுமியை கொன்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்- மார்க். கம்யூனிஸ்டு கோரிக்கை
Published on

சென்னை:

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறயிருப்பதாவது:-

கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையம் ஒன்றியத்தில் 6 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கி படுகொலை செய்துள்ள சம்பவம் மிகுந்த மன வேதனையளிக்கிறது. தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கு உள்ளான பின்னணியில், அதே மாவட்டத்தில் மேலும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது இப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25-ந்தேதி காணாமல் போன குழந்தை வீட்டுக்கு அருகிலேயே பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. குழந்தையின் உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளன.

சிறுமியை பாலியல் வல்லுறவு செய்து படுகொலை செய்துள்ள இந்த கோரச் சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது.

குரூரமான இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது, போஸ்கோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #GirlHarassment

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com