சரணடைந்த ராஜகோபால், ஜனார்த்தனனை புழல் சிறையில் அடைக்க உத்தரவு

சக்கர நாற்காலியில் வந்து ஆஜரான சரவணபவன் ராஜகோபால் மற்றும் ஜனார்த்தனன் ஆகியோரை புழல் சிறையில் அடைக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஸ்ட்ரெச்சடில் கோர்ட்டுக்கு வந்த ரஜகோபால்
ஸ்ட்ரெச்சடில் கோர்ட்டுக்கு வந்த ரஜகோபால்
Published on

சென்னை:

ஜீவஜோதி கணவர் சாந்தகுமார் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்ட ராஜகோபால், தனது உடல்நிலையை காரணம் காட்டி சரண் அடைவதற்கு அவகாசம் கேட்டிருந்தார். ஆனால், அவருக்கு அவகாசம் வழங்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்றம், உடனடியாக சரண் அடையும்படி இன்று உத்தரவிட்டது.

இதைத்தொடர்ந்து ராஜகோபால் சரணடைவதற்காக ஆம்புலன்சில் சென்னை குற்றவியல் நீதிமன்றத்துக்கு இன்று வந்தார். ராஜகோபாலை சக்கர நாற்காலியில் நீதிமன்ற அறைக்கு அழைத்து வர நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, அவர் சக்கர நாற்காலியில் அழைத்துச் செல்லப்பட்டார். ராஜகோபாலை நீதிபதி புழல் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இதேபோல், மற்றொருவரான ஜனார்த்தனன் இன்று சக்கர நாற்காலியில் வந்து ஆஜரானார். அவரையும் புழல் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். சாந்தகுமார் கொலை வழக்கில் 2 வருட சிறைத்தண்டனை பெற்றவர் ஜனார்த்தனன் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com